Monday, March 2, 2026
No menu items!

“ஜனநாயகன்” படம் 3 மாதம் தள்ளிபோகிறதா ..?? கவலையில் விஜய் ரசிகர்கள் ..!!

தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் சென்சார் சிக்கல்களால் நீண்ட காலமாக முடங்கிக் கிடக்கிறது. இந்நிலையில், பிரபல டிக்கெட் முன்பதிவு தளமான புக் மை ஷோவில் (BookMyShow) இப்படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று காட்டப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த ‘நக்கல் மன்னன்’ ப்ளூ சட்டை மாறன், தனது சமூக வலைதளப் பக்கத்தில் காரசாரமான கிண்டலைப் பதிவு செய்துள்ளார். “என்னது, ஜனநாயகன் டிசம்பர் ரிலீஸா? அப்போது விஜய் முதலமைச்சர் ஆகியிருப்பாரே!” என்று அவர் பதிவிட்டுள்ள கருத்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒருவேளை பிப்ரவரி மாதத்திற்குள் இப்படம் வெளியாகாவிட்டால், ஜூன் மாதத்திற்குப் பிறகே திரைக்கு வர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ஏனெனில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை வெளியிடுவதில் சிக்கல்கள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. அரசியல் பின்னணி கொண்ட படம் என்பதால்,

தேர்தல் நடத்தை விதிமுறைகளால் இதன் வெளியீடு பாதிக்கப்படலாம் என்பதே திரைத்துறையினரின் கணிப்பாக உள்ளது. ஏற்கனவே தாமதமாகி வரும் இப்படத்திற்கு ப்ளூ சட்டை மாறனின் இந்தப் பதிவு மேலும் ஒரு விவாதத்தை உருவாக்கியுள்ளது. படத்தின் தயாரிப்பு நிறுவனம் இது குறித்து அதிகாரப்பூர்வமாக என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News