Sunday, March 1, 2026
No menu items!

டி20 உலகக்கோப்பை 2026 இன்று தொடக்கம்.. இந்தியா-இலங்கை நடத்தும் கிரிக்கெட் திருவிழா..!!

உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை (ICC Men’s T20 World Cup 2026) கிரிக்கெட் தொடர் இன்று (பிப்ரவரி 07) அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது. இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்தும்

இந்த பிரம்மாண்டமான கிரிக்கெட் தொடர், இன்று தொடங்கி மார்ச் 08 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன்கள் உட்பட மொத்தம் 20 சர்வதேச அணிகள் உலகக்கோப்பையை வெல்வதற்காகக் களமிறங்குகின்றன.

போட்டிகள் தொடங்குவதை முன்னிட்டு, தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளின் கேப்டன்களும் உலகக்கோப்பையுடன் இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

சொந்த மண்ணில் நடைபெறும் தொடர் என்பதால் இந்திய அணியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதேவேளை, இலங்கையிலும் போட்டிகள் நடைபெறுவது

ஆசிய கிரிக்கெட் ரசிகர்களுக்குப் பெரும் விருந்தாக அமையவுள்ளது. சுமார் ஒரு மாதம் நடைபெறவுள்ள இத்தொடரின் முதல் லீக் போட்டிகள் இன்றிலிருந்து விறுவிறுப்பாகத் தொடங்குகின்றன…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News