Monday, March 2, 2026
No menu items!

15 வருடம் கணக்கு காட்டலயா..?? விஜய்யை வறுத்தெடுத்த ப்ளு சட்டை மாறன்..!!

திரை விமர்சகர் ப்ளு சட்டை மாறன், வரி ஏய்ப்பு வழக்கில் சிக்கியுள்ள நடிகர் விஜய் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். 2015-ஆம் ஆண்டு வெளியான ‘புலி’ திரைப்படத்திற்காகப் பெற்ற ரூ.15 கோடி வருமானத்தை மறைத்த புகாரில், விஜய்க்கு விதிக்கப்பட்ட ரூ.1.5 கோடி அபராதம் செல்லும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பைச் சுட்டிக்காட்டித் தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பதிவிட்டுள்ள மாறன், “ஊழலை ஒழிப்பேன் என்று மேடைகளில் பேசிவிட்டு, 15 வருடம் கணக்கு காட்டாமல் வருமானத்தை மறைத்தது வெட்கக்கேடானது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

எப்போதும் முன்னணி நடிகர்களைத் துணிச்சலாக விமர்சிக்கும் மாறன், தற்போது அரசியலில் கால் பதித்துள்ள விஜய்யின் நேர்மையைக் கேள்விக்குறியாக்கியுள்ளார். நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதம் உறுதி செய்யப்பட்ட நிலையில், அரசியல் ரீதியாக இது அவருக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. மாறனின் இந்தப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி,

விஜய் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய இந்த விவகாரம், விஜய்யின் அரசியல் பிம்பத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சினிமா விமர்சனங்களைத் தாண்டி, ஒரு நடிகரின் தனிப்பட்ட மற்றும் அரசியல் வெளிப்படைத்தன்மை குறித்து மாறன் முன்வைத்துள்ள இந்தக் கண்டனம் அரசியல் வட்டாரத்தில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News