Monday, March 2, 2026
No menu items!

“சாம்பியன் பட்டம்” வென்று சாதனை – இன்ஸ்டாவில் புகைப்படங்களைப் பகிர்ந்த சூர்யா..!!

இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் (ISPL) 2026 டி10 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் நடிகர் சூர்யாவிற்குச் சொந்தமான ‘சென்னை சிங்காம்ஸ்’ அணி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தத் தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை அணி, இறுதிப்போட்டியிலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி மகுடம் சூடியது. வெற்றிக் கோப்பையைக் கைப்பற்றிய பின், மைதானத்தில் ஒட்டுமொத்த அணியினரும் உற்சாகமாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அணியின் உரிமையாளரான நடிகர் சூர்யா, தனது அணியினரின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை நேரில் கண்டு மகிழ்ந்தார். மேலும், இந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களுடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

07 பிப்ரவரி 2026 அன்று நடைபெற்ற இந்த இறுதிப்போட்டி, டென்னிஸ் பால் கிரிக்கெட் வரலாற்றில் சென்னை அணிக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. சமூக வலைதளங்களில் சூர்யாவிற்கும் அவரது சென்னை சிங்காம்ஸ் அணிக்கும் திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சார்பில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News