2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான வேலைகள் இப்போதே விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் அவர்களுடைய தொண்டர்களுக்கு பதவி கொடுத்து வருகின்றனர் . அந்த வகையில் ஆரம்பத்தில் இருந்தே தவெக கட்சியில் பதவி பற்றிய பல குற்றசாற்றுகள் எழுந்த நிலையில் , தற்போது தவெக கட்சி நிர்வாகி அஜிதா தற்கொலை முயற்சி செய்துள்ளார் .
அந்த வகையில் தூத்துக்குடியைச் சேர்ந்த தவெக கட்சி நிர்வாகி அஜிதா மத்திய மாவட்ட செயலாளர் பட்டியலில் தன்னுடைய பெயர் இடம் பெறாததால் தன்னுடைய ஆதரவாளர்களுடன் கட்சி அலுவலகத்துக்கு வந்து விஜய்யை சந்திக்க முயன்றார் .ஆனால் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை . இதன் பிறகு தார்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் அஜிதா .
பின்னர் மனவேதனையில் வீடு திரும்பியவுடன் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார் அஜிதா . தற்போது இவருக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை நடந்து வருகிறது…









































