Tuesday, June 2, 2026

குஜராத்தை தும்சம் செய்த மும்பை இந்தியன்ஸ் ..!! 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!!

அகமதாபாத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான ஐபிஎல் லீக் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியை 99 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது. அந்த அணியின் இளம் வீரர் திலக் வர்மா அதிரடியாக விளையாடி சதம் விளாசி அணியின் ஸ்காரை உயர்த்தினார்.தொடர்ந்து 200 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய குஜராத் அணி, மும்பையின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது.

15.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த குஜராத் அணி வெறும் 100 ரன்களுக்கு சுருண்டது. ஆட்டநாயகனாக சதம் விளாசிய திலக் வர்மா தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 6 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் மும்பை அணி 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.ஏப்ரல் 21, 2026 அன்று நடைபெற்ற இந்தப் போட்டி மும்பை ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.

அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்ய முடியும் என்ற நிலையில், இந்த வெற்றி மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. குஜராத் அணி தனது சொந்த மண்ணிலேயே படுதோல்வியைச் சந்தித்தது அந்த அணி ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் தனது பழைய ஃபார்முக்குத் திரும்பியுள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News