Tuesday, June 2, 2026

“இந்தியாவுக்கு வாங்க” – அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸ்ரீதர் வேம்பு விடுத்த உருக்கமான வேண்டுகோள்..!!

இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் இளைஞர் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் மீண்டும் தாய்நாட்டிற்கு திரும்ப வேண்டும் என ஸோஹோ (Zoho) நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் வேம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். பாரத மாதாவிற்கு உங்களின் தனித்துவமான திறமை தற்போது மிகவும் தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நமது நாட்டு இளைஞர்கள் வளம் பெறுவதற்கும், அவர்கள் சரியான பாதையில் பயணிப்பதற்கும் வெளிநாடுகளில் நீங்கள் பல ஆண்டுகளாகப் பெற்ற தொழில்நுட்பத் தலைமைத்துவ அனுபவம் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பப் புரட்சியில் இந்தியா உலகளவில் முன்னேறி வரும் வேளையில், அனுபவம் வாய்ந்த வல்லுநர்களின் வருகை தேசத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் என அவர் நம்புகிறார். அமெரிக்காவில் செட்டில் ஆகியுள்ள இந்தியர்கள் தங்கள் வேர்களை மறந்துவிடாமல், தாயகத்தின் வளர்ச்சிக்காக பங்களிக்க முன்வர வேண்டும் என்பதே இவரது பிரதான கோரிக்கையாக உள்ளது.

இளைஞர்களுக்கு வழிகாட்டவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது என ஸ்ரீதர் வேம்பு தனது செய்தியில் வலியுறுத்தியுள்ளார். இந்த உருக்கமான அழைப்பு தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News