சமீபத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற அஜித் குமார், போட்டிக்குப் பிறகு தனது ரசிகர்களுக்கும், ஊடகங்களுக்கும் கருத்துத் தெரிவிக்கையில் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் பேசுகையில், “எனது ரேசிங் அணி இப்போது தான் பயணத்தைத் தொடங்கியுள்ளது. கடின உழைப்பும் , அர்ப்பணிப்பும் நிச்சயம் ஒருநாள் பலன் தரும். எனது அணி நிச்சயம் ஒருநாள் ரசிகர்களைப் பெருமைப்படுத்தும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்று கூறினார்.
மேலும், தனக்கு ஆதரவு அளிப்பதற்காக மைதானத்திற்குத் திரண்டு வந்த ஏராளமான ரசிகர்களைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், அவர்களிடத்தில் தனது வருத்தத்தையும் பதிவு செய்தார். “எனக்கு ஆதரவு கொடுக்க இவ்வளவு தூரம் திரண்டு வந்த ரசிகர்கள், எனது அணி பரிசு வெல்வதை இந்த முறை பார்க்க முடியாமல் போனது எனக்கு தனிப்பட்ட முறையில் வருத்தமாக இருக்கிறது,” என்று அவர் தெரிவித்தார்.
மேலும் வெற்றி தோல்விகளைக் கடந்து, தனது மீதுள்ள அன்பிற்காக மட்டுமே ஆதரவளிக்க வந்த ரசிகர்களின் செயல் தன்னை நெகிழ வைத்திருப்பதாகவும், அவர்களுக்காகவே எதிர்காலத்தில் மிகப்பெரிய வெற்றிகளைத் தனது அணி குவிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார் அஜித் …

