Monday, April 13, 2026

தனுஷ், மிருணாளுக்கு “பிப்ரவரி 14” திருமணமா.?? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை .!!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நடிகர் தனுஷ் மற்றும் நடிகை மிருணாள் தாகூர் இருவரும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கடந்த சில வாரங்களாக இணையத்தில் தகவல்கள் தீயாய் பரவி வந்தன. குறிப்பாக, வரும் பிப்ரவரி 14-ம் தேதி (காதலர் தினம்) இவர்களது திருமணம் நடைபெறவிருப்பதாக பாலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது.

இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இதுகுறித்து சம்பந்தப்பட்ட நடிகர்கள் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் இருந்தது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவியது. இந்நிலையில், தற்போது பரவி வரும் இந்தத் தகவலுக்கு நடிகை மிருணாள் தாகூர் தரப்பு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது.

“தனுஷுக்கும் மிருணாள் தாகூருக்கும் திருமணம் என்று பரப்பப்படும் செய்திகளில் துளியும் உண்மையில்லை. இவை அனைத்தும் அடிப்படை ஆதாரமற்ற வதந்திகளே,” என்று அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். இந்த அதிகாரப்பூர்வ விளக்கத்தின் மூலம், கடந்த சில நாட்களாக உலாவந்த திருமண வதந்திகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News