Monday, March 2, 2026
No menu items!

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு.? மேஷம் முதல் மீனம் வரை.. இன்றைய ராசி பலன் விவரம் இதோ..!!

ரிஷபம் : இன்று உங்களுக்கு யோகமான நாளாக அமையும். உங்களைப் பற்றித் தவறாகப் புரிந்துகொண்டவர்கள் மனம் மாறுவார்கள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். பிரிந்து சென்ற உறவினர்கள் அல்லது நண்பர்கள் விரும்பி வந்து இணைவார்கள்.

மிதுனம் : இன்று உங்களுக்குச் சந்திராஷ்டமம் என்பதால் எதிலும் நிதானம் அவசியம். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடி ஏற்படலாம். எதையும் யோசித்துப் பேசுவது நல்லது; வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். மறதியால் சிறு சிறு பிரச்சனைகள் வரலாம்.

கடகம் : நட்பால் நன்மைகள் நடைபெறும் நாள். மனதில் புதிய சிந்தனைகள் மற்றும் திட்டங்கள் தோன்றும். திருமணப் பேச்சுவார்த்தைகளில் இருந்த தடைகள் விலகி, விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரும்.

சிம்மம் : இன்று நீங்கள் சற்று விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாள். உத்தியோகத்தில் இடமாற்றம் வருவதற்கான அறிகுறிகள் தென்படும். அலைச்சல் இருந்தாலும், அதற்கேற்ற ஆதாயம் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம்.

கன்னி : எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக வசூலாகாத பழைய கடன் பாக்கிகள் கைக்கு வந்து சேரும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். மனதிற்குப் பிடித்தமான சம்பவங்கள் நடைபெறும்.

துலாம் : முக்கியமானவர்களைச் சந்திப்பதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் முயற்சிகளில் இருந்த தடைகள் அனைத்தும் அகலும். புதிய வாகனம் வாங்குவது அல்லது மாற்றுவது பற்றிச் சிந்திப்பீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும்.

விருச்சிகம் : பொதுவாழ்வில் புகழ் மற்றும் அந்தஸ்து கூடும் நாள். பொருளாதார நிலை உயரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். வேலைக்குத் தேவையான புதிய பணியாளர்களைச் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

தனுசு : உங்கள் வாழ்வில் வளர்ச்சி கூடும் நாள். தனவரவு தாராளமாக இருக்கும். நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ள நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு பாராட்டு பெறுவீர்கள்.

மகரம் : இன்று உங்களுக்குச் சிறப்பான நாளாக அமையும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு வீடு அல்லது அலுவலகம் மாறுவது தொடர்பான சிந்தனைகள் மேலோங்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

கும்பம் : புதிய திட்டங்களைச் செயல்படுத்த உகந்த நாள். சவாலான காரியங்களையும் தைரியமாகச் செய்து முடிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

மீனம் : வேலைகளை விரைவாகச் செய்து முடிப்பீர்கள். நீண்ட நாட்களாகத் தள்ளிப்போன சுபகாரியங்கள் கைகூடும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையும். பெண்களுக்குக் கடன் சுமை குறைந்து நிம்மதி கிடைக்கும்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News