Monday, April 13, 2026

இந்த டைம் மிஸ் ஆகாது ..!! கூட்டணியில் இணைந்த பின் டிடிவி தினகரன் பேட்டி..!!

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணைந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுத் தனது உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.தற்போதைய தி.மு.க அரசை “கஞ்சா மாடல் அரசு” என்று கடுமையாகச் சாடிய தினகரன்,

இந்த அரசை வீழ்த்துவதே தங்களின் முதன்மையான நோக்கம் என்று குறிப்பிட்டார். “2021-ம் ஆண்டு தவறவிட்ட ஜெயலலிதாவின் ஆட்சியை, இம்முறை 2026-ம் ஆண்டு அமைத்தே தீருவோம்,” என்று அவர் சூளுரைத்துள்ளார்.”இந்த டைம் மிஸ் ஆகாது” என்று நம்பிக்கையுடன் கூறிய அவர்,

கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து எதிர்வரும் தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருவதாகத் தெரிகிறது. தமிழக அரசியல் களத்தில் மீண்டும் கூட்டணி மாற்றங்கள் நிகழ்ந்து வரும் சூழலில், தினகரனின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest News