Monday, April 13, 2026

மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் “டார்ச் லைட்” சின்னம்..!! தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் (MNM) கட்சிக்கு ‘டார்ச் லைட்’ (Torch Light) சின்னத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கியுள்ளது.கடந்த தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் இதே ‘டார்ச் லைட்’ சின்னத்தில்தான் போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் தேர்தலிலும் தங்களுக்கு அதே சின்னம் ஒதுக்கப்பட வேண்டும் என்று அக்கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்த நிலையில்,

தேர்தல் ஆணையம் தற்போது அதையே உறுதி செய்துள்ளது.தங்களுக்குப் பரிச்சயமான சின்னமே மீண்டும் கிடைத்துள்ளதால், அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சின்னம் உறுதியானதைத் தொடர்ந்து,

‘டார்ச் லைட்’ சின்னத்தை மக்களிடம் இன்னும் பரவலாகக் கொண்டு சேர்க்கும் வகையில், பிரச்சாரப் பணிகளைத் தீவிரப்படுத்த அக்கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது. விரைவில் கமல்ஹாசன் தனது தேர்தல் பிரச்சார வியூகங்களை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News