Friday, April 17, 2026

மருத்துவச் செலவை பற்றி இனி கவலையில்லை..!! முதல்வரின் ரூ 5 லட்சம் காப்பீட்டுத் திட்டம் ..!!

தமிழகத்தில் மருத்துவச் செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்குப் பெரும் உதவியாக இருப்பது ‘முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்’ (CMCHIS) ஆகும். இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணமில்லா சிகிச்சை வழங்கப்படுகிறது. இருதய அறுவை சிகிச்சை, புற்றுநோய், டயாலிசிஸ் மற்றும் விபத்து சிகிச்சை போன்றவை இதில் அடங்கும்.

பொதுமக்கள் தங்கள் ஊரில் எந்தெந்த மருத்துவமனைகளில் இந்த வசதி உள்ளது என்பதை CMCHIS அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ‘Network Hospitals’ பிரிவில் சென்று, மாவட்டம் மற்றும் சிகிச்சை வாரியாகத் தேடித் தெரிந்துகொள்ளலாம். சிகிச்சைக்குச் செல்லும் முன் ஸ்மார்ட் கார்டு, ரேஷன் கார்டு மற்றும் ஆதார் ஆகிய ஆவணங்கள் அவசியம்.

மேலும், சம்பந்தப்பட்ட மருத்துவமனை தற்போது பட்டியலில் உள்ளதா என்பதையும், குறிப்பிட்ட சிகிச்சைக்குக் காப்பீடு உண்டா என்பதையும் அங்குள்ள காப்பீட்டு உதவி மையத்தில் (Help Desk) உறுதி செய்துகொள்வது சிறந்தது. சரியான விழிப்புணர்வுடன் இத்திட்டத்தைப் பயன்படுத்தினால், எளிய மக்கள் கடன் சுமையின்றித் தரமான சிகிச்சையைப் பெற முடியும்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News