Monday, April 13, 2026

திமுக கூட்டணி முடிவு யார் கையில்..?? – திருமாவளவன் விளக்கம்..!!

வரவிருக்கும் தேர்தலில் கூட்டணிக் கணக்குகள் குறித்துப் பல்வேறு ஊகங்கள் நிலவி வரும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் முக்கிய விளக்கத்தை அளித்துள்ளார்.திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெற வேண்டும் என்பதைத் திமுக தலைமை தான் முடிவு செய்யும் என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

“கூட்டணியில் கட்சிகளைச் சேர்ப்பது குறித்துப் பேச எங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை, உரிமையும் இல்லை,” என்று அவர் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.அதேவேளையில், தங்கள் கட்சியின் கொள்கை நிலைப்பாட்டையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

“சாதிய, மதவாத கட்சிகள் இடம்பெறும் கூட்டணியில் நாங்கள் ஒருபோதும் இருக்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டில் விசிக உறுதியாக உள்ளது,” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். தேர்தல் நெருங்கும் வேளையில், கூட்டணிக் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவரது இந்தப் பேச்சு அமைந்துள்ளது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News