Saturday, April 18, 2026

விஜய் சாதனையை முறியடிக்காத ரஜினி, அஜித் படங்கள்..!! முழு வசூல் விவரம் இதோ..!!

தளபதி விஜய் நடிப்பில் மெகா ஹிட்டான ‘கில்லி’ திரைப்படம், பல ஆண்டுகளுக்குப் பிறகு ரீரிலிஸ் செய்யப்பட்டு உலகளவில் ரூ.30 கோடி வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து வெளியான ரஜினியின் ‘படையப்பா’ ரூ.19 கோடியும், அஜித்தின் ‘மங்காத்தா’ ரூ.21.9 கோடியும் மட்டுமே வசூலித்து கில்லியின் சாதனையை முறியடிக்கத் தவறியுள்ளன. கோடை விடுமுறை மற்றும் போட்டிப் படங்கள் இல்லாத சூழல் கில்லிக்குச் சாதகமாக அமைந்ததாகக் கூறப்படுகிறது.

அதேசமயம் மங்காத்தா மற்றும் படையப்பா ரிலீஸின் போது புதிய படங்கள் போட்டியாக இருந்ததே இந்த வசூல் சரிவுக்குக் காரணம் எனத் திரை விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். எது எப்படியோ, தற்போதைய நிலவரப்படி ரீரிலிஸ் வசூல் வேட்டையில் ‘கில்லி’ படமே முதலிடத்தில் நீடிக்கிறது. இதனால் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இந்த வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News