Monday, April 13, 2026

“பாமகவின் தலைவர்” அன்புமணி தான்..!! டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அதிரடி அறிக்கை..!!

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவராக அன்புமணி ராமதாஸ் நீடிப்பதை இந்தியத் தேர்தல் ஆணையம் மீண்டும் உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற மறு ஆய்வு மனு மீதான விசாரணையில், தேர்தல் ஆணையம் தனது தெளிவான நிலப்பாட்டை முன்வைத்தது. அதன்படி, அன்புமணி ராமதாஸின் தலைவர் பதவிக்கான கால அளவு 2026-ஆம் ஆண்டு வரை நீடிக்கிறது எனத் தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. பாமக தலைமைப் பொறுப்பு குறித்து நிலவி வந்த சில சந்தேகங்களுக்கும், சட்ட ரீதியான விவாதங்களுக்கும் இந்த அறிவிப்பு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 09 பிப்ரவரி 2026 அன்று இந்தத் தகவல் அதிகாரப்பூர்வமாகப் பதிவானது.

கட்சியின் உள்விவகாரங்கள் மற்றும் பதவி தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையத்தின் இந்த உறுதிப்பாடு அன்புமணி ஆதரவாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வரும் சட்டமன்றத் தேர்தலை அன்புமணி ராமதாஸ் தலைமையிலேயே பாமக எதிர்கொள்ளும் என்பது உறுதியாகியுள்ளது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, பாமகவின் உட்கட்சித் தேர்தல் நடைமுறைகள் மற்றும் தலைவரின் பதவிக்காலம் குறித்த குழப்பங்கள் நீங்கியுள்ளன.

பாமகவின் அரசியல் நகர்வுகளில் இது ஒரு முக்கியமான சட்ட வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் இந்தத் தெளிவுபடுத்தல் பாமகவின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு வலுசேர்க்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News