Thursday, April 16, 2026

ஒரே நாளில் 9,801 பேருக்கு அரசுப் பணி – சாதனை படைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் நோக்கில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் அண்மையில் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்தத் தேர்வுகளில் கடின உழைப்பால் வெற்றி பெற்று, முறைப்படி அரசுப் பணிகளுக்குத் தேர்வான 9,801 நபர்களுக்கு இன்று பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகின்றன. “ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்!” என்ற முழக்கத்துடன் நடைபெறும் இந்த விழாவில், முதலமைச்சர் கலந்துகொண்டு இளைஞர்களிடம் ஆணைகளை நேரடியாக ஒப்படைக்கிறார்.

ஒரே நாளில் இத்தனை பேருக்குப் பணி நியமன ஆணை வழங்கப்படுவது அரசுப் பணியாளர் தேர்வாணைய வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தமிழகத்தின் அரசு நிர்வாகம் மேலும் வலுப்பெறும் என்றும், தகுதியுள்ள இளைஞர்களுக்கு உரிய நேரத்தில் வேலைவாய்ப்பு கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி ஆணை பெறும் இளைஞர்களும் அவர்களது குடும்பத்தினரும் இந்த அறிவிப்பால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இன்றைய தினம் தமிழக அரசு வேலைவாய்ப்புத் துறையில் ஒரு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாளாகக் கருதப்படுகிறது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News