கோவை மாவட்ட ஆவின் பால் நுகர்வோர்களுக்கும், குறிப்பாக மாதந்தோறும் ஆவின் பால் அட்டை பெற்றுப் பயன்பெற்று வரும் அட்டைதாரர்களுக்கும் ஆவின் நிர்வாகம் தற்பொழுது மிக முக்கிய அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்) சார்பில் விநியோகிக்கப்படும் பால் அட்டைகளுக்கான சிறப்புச் சலுகைகள் தற்பொழுது மாற்றியமைக்கப்பட்டு உள்ளன.அதன்படி, ஆவின் நிறுவனத்தின் பிரபல தயாரிப்புகளில் ஒன்றான ஊதா நிற பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் ‘டிலைட்’ (Delite) பாலுக்கான மாதாந்திர அட்டைதாரர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த சலுகைகள் தற்பொழுது அதிரடியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆவின் பால் அட்டைகளை முன்கூட்டியே பணம் செலுத்திப் பெறும் வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, அவர்களுக்கு ஒரு லிட்டர் பாலுக்கு 2 ரூபாய் தள்ளுபடி என்ற சலுகை வழங்கப்பட்டு வந்தது.இந்நிலையில், நிர்வாகக் காரணங்கள் மற்றும் வரவு செலவு கணக்குகளை முன்னிட்டு, இந்த லிட்டருக்கு 2 ரூபாய் தள்ளுபடி என்ற சலுகையானது தற்பொழுது முழுமையாக நிறுத்தப்படுவதாகக் கோவை மாவட்ட ஆவின் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இந்த திடீர் சலுகை நிறுத்த அறிவிப்பானது,
தினசரி ஆவின் பாலை நம்பியிருக்கும் நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட்டில் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்பதால், பொதுமக்களும் அட்டைதாரர்களும் இந்த முடிவுக்குத் தங்களது பலத்த அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும், இந்த சலுகை ரத்து முடிவை ஆவின் நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் நுகர்வோர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன…

