Monday, March 2, 2026
No menu items!

ரோஹித், கோலிக்கு சம்பளம் குறைகிறதா.?? – பிசிசிஐயின் அதிரடித் திட்டம்.!!

இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து ரன் குவித்து வந்தாலும், அவர்களுக்கு பிசிசிஐ விரைவில் அதிர்ச்சி கொடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.தற்போது ஆண்டுக்கு 7 கோடி ரூபாய் ஊதியம் பெறும் ‘கிரேடு ஏ+’ (Grade A+) பிரிவில் இவர்கள் நீடிக்கின்றனர். பொதுவாக மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் ,

(டெஸ்ட், ஒருநாள், டி20) விளையாடும் வீரர்களுக்கே இந்த உயரிய அந்தஸ்து வழங்கப்படும். ஆனால், ரோஹித் மற்றும் கோலி டெஸ்ட், டி20-யில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், அவர்களை ‘பி’ கிரேடுக்கு மாற்ற ஆலோசிக்கப்பட்டு வருகிறது.இதனால் ‘ஏ+’ பிரிவில் பும்ரா மற்றும் ஜடேஜா மட்டுமே நீடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

வருங்காலத்தில் ஷுப்மன் கில், ஹர்ஷித் ராணா ஆகியோர் இந்த இடத்தைப் பிடிக்கலாம். ஒப்பந்தம் மாறினாலும், நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கத் தொடர்களில் சதங்கள் விளாசி கோலி உச்சகட்ட ஃபார்மில் உள்ளது ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest News