Monday, March 2, 2026
No menu items!

பொங்கலுக்கு ரூ.850 கோடி மது விற்பனை – இது சீரழிவின் உச்சம்..!! கொந்தளித்த அன்புமணி ..!!

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 4 நாட்களில் மட்டும் சுமார் ரூ.850 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜனவரி 14, 15, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் மூலம் இந்த விற்பனை நடந்துள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த ஆண்டு பொங்கலின் போது ரூ.710 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்ட நிலையில்,

இந்த ஆண்டு அது ரூ.140 கோடி அதிகரித்து (சுமார் 20%) ரூ.850 கோடியைத் தொட்டுள்ளது.”ஆக்கப்பூர்வமான திட்டங்களைச் செயல்படுத்துவதில் தோல்வியடைந்த தி.மு.க. அரசு, மதுவைக் கொடுத்து ஏழைக் குடும்பங்களைச் சீரழிப்பதில் மட்டுமே சாதனை படைத்து வருகிறது,” என்று அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

மது விற்பனை 20 சதவீதம் அதிகரித்திருப்பது வளர்ச்சியல்ல, அது சமூகச் சீரழிவின் அடையாளம் என்று வேதனை தெரிவித்துள்ள அன்புமணி, இதற்கு ஒரே தீர்வு பூரண மதுவிலக்கு மட்டுமே என்றும், பா.ம.க. அதை விரைவில் சாத்தியமாக்கும் என்றும் உறுதியளித்துள்ளார்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News