Tuesday, July 21, 2026

டீ டைமிற்கு ஏற்ற மொறுமொறு பருப்பு வடை – செய்முறை விளக்கம் உள்ளே ..!!

மழை பெய்யும் மாலை வேளையில், சூடான டீயுடன் மொறுமொறுப்பான வடை சாப்பிடுவது தனி சுகம். நாவில் எச்சில் ஊறவைக்கும் சுவையான பருப்பு வடையை, வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே எளிதாகச் செய்வது எப்படி என்று பார்ப்போம்.முதலில் ஒரு கப் கடலைப்பருப்பை நன்கு கழுவி ஊறவைக்க வேண்டும். மிக்ஸியில் 3 காய்ந்த மிளகாய், ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு துண்டு இஞ்சி, 4 பல் பூண்டு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

பின்னர் ஊறவைத்த பருப்பையும் இதனுடன் சேர்த்து, தண்ணீர் அதிகம் விடாமல் கொரகொரப்பாக அரைத்து எடுக்க வேண்டும்.இந்தக் கலவையை ஒரு பாத்திரத்தில் மாற்றி, அதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், 2 பச்சை மிளகாய், சிறிதளவு கொத்தமல்லி,

கால் ஸ்பூன் பெருங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் நன்றாகப் பிசையவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், மாவை வடைகளாகத் தட்டிப்போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுத்தால், மழைக்காலத்திற்கு ஏற்ற சுவையான, மொறுமொறு பருப்பு வடை தயார்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News