Monday, March 2, 2026
No menu items!

நாவில் கரையும் காசி அல்வா..!! சுலபமாகச் செய்வது எப்படி..??

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இனிப்பு வகைகளில் அல்வாவுக்கு எப்போதும் தனி இடமுண்டு. அந்த வகையில், வெண் பூசணியைக் கொண்டு செய்யப்படும் புகழ்பெற்ற ‘காசி அல்வா’வை மிக எளிமையாக வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்ப்போம்.இதற்குத் தேவையான பொருட்கள்: ஒரு வெண் பூசணி, 3 ஸ்பூன் நெய், 10 முந்திரி, ஒரு கப் சர்க்கரை மற்றும் சிறிது குங்குமப்பூ. முதலில் குங்குமப்பூவை பாலில் ஊறவைக்க வேண்டும்.

பூசணியைத் துருவி, அதன் நீரைப் பிழிந்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.வாணலியில் நெய் ஊற்றி முந்திரியை வறுத்து எடுத்துவிட்டு, அதே நெய்யில் துருவிய பூசணியைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும். பின்னர் பூசணி சாற்றை ஊற்றி நன்கு வேகவிடவும். பூசணி வெந்ததும் சர்க்கரை மற்றும் குங்குமப்பூ பால் சேர்த்துக் கைவிடாமல் கிளறவும்.

அவ்வப்போது நெய் சேர்த்து, கலவை அல்வா பதத்திற்குத் திரண்டு, நெய் பிரிந்து வரும்போது வறுத்த முந்திரியைச் சேர்த்தால், நாவூறும் சுவையான காசி அல்வா தயார்! கல்யாண வீடுகளில் பரிமாறப்படும் இந்தச் சுவையான இனிப்பை நீங்களும் செய்து மகிழுங்கள்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News