Saturday, April 18, 2026

15 வருஷம் ஆனாலும் மவுசு குறையல..!! வசூலில் மாஸ் காட்டும் “மங்காத்தா” ..!!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் 2011-ம் ஆண்டு வெளியாகித் திரையரங்குகளை அதிரவைத்த ‘மங்காத்தா’, 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுப் புதிய சாதனை படைத்துள்ளது. அஜித்தை பழைய துடிப்புடன் திரையில் காண ரசிகர்கள் நீண்ட நாட்களாகக் காத்திருந்த நிலையில், அவர்களின் தாகத்தைத் தணிக்கும் வகையில் இப்படம் மீண்டும் வெளியிடப்பட்டது.

ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் வெளியான இப்படம், புதிய படங்களுக்கு இணையான வரவேற்பைப் பெற்றுள்ளது. “நாங்கள் அஜித்தை இப்படித்தான் பார்க்க ஆசைப்படுகிறோம்,” என ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பாக்ஸ் ஆபிஸிலும் மங்காத்தா தனது கெத்தை நிரூபித்துள்ளது. வெளியான கடந்த 4 நாட்களில் மட்டும் உலகளவில் இப்படம் ரூ. 17 கோடி வசூல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு ரீ-ரிலீஸ் படத்திற்கு இவ்வளவு பிரம்மாண்ட வசூல் கிடைத்திருப்பது திரையுலகினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News