Monday, March 2, 2026
No menu items!

விடுதலை, கருடன் வரிசையில் அடுத்த ஹிட்.? சூரியின் மண்டாடி பட அப்டேட்..!!

நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய கதாநாயகனாக உருவெடுத்துள்ள நடிகர் சூரி, தனது திரைப்பயணம் மற்றும் அடுத்ததாக வெளியாகவுள்ள ‘மண்டாடி’ (Mandaadi) திரைப்படம் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். ​இது குறித்து அவர் கூறுகையில்,

விடுதலை திரைப்படத்திற்குப் பிறகு ‘கருடன்’ படத்தை செய்யும்போது, இது எப்படி வரும் என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், வெறும் கதை நாயகனாக இருந்த எனக்குள், ஒரு கதாநாயகனாகவும் ஆகலாம் என்ற ஆழமான நம்பிக்கையை

அந்தப் படம் விதைத்தது,” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் பேசுகையில், “விடுதலை படத்தைப் பார்த்த பிறகு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் முதல் அத்தனை பேரும் என்னைப் பாராட்டினார்கள். அதேபோல், ‘மாமன்’ படத்தின் மூலமாக குழந்தைகளின் மனதிலும் நான் இடம்பிடித்துவிட்டேன்.

இந்த உயரத்திற்கு நான் வந்திருப்பதற்கு உங்கள் அத்தனை பேரின் ஆசீர்வாதம் மட்டுமே காரணம்,” என்று நன்றியைத் தெரிவித்துள்ளார். ​தற்போது தான் நடித்து வரும் ‘மண்டாடி’ திரைப்படத்தை 5 மொழிகளில் கொண்டு வருவது

தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும் நடிகர் சூரி தெரிவித்துள்ளார். விடுதலை மற்றும் கருடன் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, சூரியின் இந்த பான்-இந்திய (Pan-India) முயற்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News