Wednesday, April 15, 2026

இந்தியா 2028-ல் ஜெர்மனியை முந்தும்..!! உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக வளர்ச்சி.!!

இந்தியாவின் பொருளாதாரம் வரும் ஆண்டுகளில் அசுர வளர்ச்சி காணும் என பாரத ஸ்டேட் வங்கி (SBI) தனது சமீபத்திய ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையின்படி, வரும் 2030-ம் ஆண்டிற்குள் இந்தியாவின் தனிநபர் வருமானம் 4,000 டாலராக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.தற்போது வளர்ந்து வரும் நாடாக உள்ள இந்தியா, இந்த வருமான உயர்வினால் ‘மேல்-நடுத்தர வருவாய்’ (Upper-Middle Income) கொண்ட நாடுகள் என்ற அந்தஸ்தைப் பெறும்.

இது இந்தியப் பொருளாதார வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.மேலும், உலகப் பொருளாதார அரங்கில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்றும் அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக, இன்னும் இரண்டு ஆண்டுகளில், அதாவது 2028-ம் ஆண்டிற்குள் பொருளாதாரத்தில் வலுவான நிலையில் உள்ள ஜெர்மனியைப் பின்னுக்குத் தள்ளி,

இந்தியா உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் என்றும் எஸ்பிஐ கணித்துள்ளது. இந்த வளர்ச்சிப் போக்கு சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியில் இந்தியா மீதான நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest News