திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், “டெல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படியும், தேர்தல் ஆணைய கருத்தின்படியும் அன்புமணி ராமதாஸ் பாமக தலைவர் என்று சொல்ல முடியாது.
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அவர், சின்னம் மற்றும் கொடியைப் பயன்படுத்துவது நீதிமன்ற அவமதிப்பாகும்” என்று எச்சரித்தார்.மேலும், அன்புமணி தன்னைத் தலைவர் எனக் கூறுவதை ஊடகங்கள் வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். தேர்தல் கூட்டணி குறித்துப் பேசிய அவர்,
“சேலம் பொதுக்குழு எனக்கு அளித்த அதிகாரத்தின்படி, கூட்டணி குறித்த முடிவு விரைவில் அறிவிக்கப்படும். பாமக அமைக்கும் கூட்டணி மாபெரும் வெற்றிக் கூட்டணியாக அமையும்” என்று உறுதியளித்தார். நடப்பு அரசியல் சூழல் குறித்தும் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்…

