Monday, March 2, 2026
No menu items!

இந்தியா தோல்வி, ஆனால் கோலி சாதனை – ரிக்கி பாண்டிங்கை முந்தினார்.!!

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி தொடரை இழந்தாலும், விராட் கோலியின் ஆட்டம் ரசிகர்களுக்கு பெரும் ஆறுதலாக அமைந்தது. இந்தப் போட்டியில் அபாரமாக விளையாடிய கோலி, 108 பந்துகளில் 124 ரன்கள் குவித்து தனது 85-வது சர்வதேச சதத்தைப் பதிவு செய்தார்.இதன் மூலம், ஒருநாள் போட்டிகளில் 3-வது வரிசையில் களமிறங்கி அதிக ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை கோலி முறியடித்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிராக இவர் அடிக்கும் 7-வது ஒருநாள் சதம் இதுவாகும். கோலியின் இந்த ‘விஸ்வரூப’ ஆட்டத்தை அவரது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா வெகுவாகப் பாராட்டியுள்ளார். “அதிக விக்கெட்டுகள் விழுந்ததால் அவரால் வெற்றியைத் தேடித்தர முடியவில்லை என்றாலும், அவர் காட்டிய அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது,” என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, டேரில் மிட்செல் மற்றும் கிளென் பிலிப்ஸ் ஆகியோரின் சதங்களால் நியூசிலாந்து 337 ரன்களைக் குவித்தது. கடினமான இலக்கை துரத்திய இந்தியா 296 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி, சொந்த மண்ணில் நியூசிலாண்டிடம் முதல்முறையாக ஒருநாள் தொடரை இழந்தது குறிப்பிடத்தக்கது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News