Sunday, April 12, 2026

மரபுகளை மீறி ஆளுநர் ரவி வெளிநடப்பு – முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்.!!

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நிகழ்வுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசு தயாரித்த உரையை முழுமையாக வாசிக்காமல் பாதியிலேயே வெளியேறினார்.ஆளுநரின் இந்தச் செயல் குறித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

“மீண்டும் ஒருமுறை சட்ட விதிகளையும், மரபுகளையும் மீறி அவையில் இருந்து ஆளுநர் ரவி வெளியேறிச் சென்றுள்ளார்,” என்று முதல்வர் குற்றம் சாட்டினார்.மக்களாட்சி தத்துவத்திற்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாகவும், அரசியல் சாசன விதிகளின்படி,

அரசு தயாரித்துக் கொடுத்த உரையை வாசிக்காமல் புறக்கணித்தது மரபு மீறல் என்றும் முதல்வர் தனது உரையில் சுட்டிக்காட்டினார். ஆளுநர் உரை வாசிக்கப்படாமலே அவர் வெளியேறியது, தமிழக அரசியலில் ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையிலான மோதலை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News