Monday, April 13, 2026

இனி ‘டாக்டர்’ ரோஹித் சர்மா..!! இந்திய கேப்டனுக்குக் கிடைத்த புதிய அங்கீகாரம்..!!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், ‘ஹிட்மேன்’ என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவருமான ரோஹித் சர்மாவுக்குக் கௌரவ டாக்டர் பட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது கிரிக்கெட் உலகினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள புகழ்பெற்ற டி.ஒய். பாட்டீல் (D.Y. Patil) பல்கலைக்கழகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கிரிக்கெட் விளையாட்டில் ரோஹித் சர்மா ஆற்றியுள்ள அளப்பரிய பங்களிப்பு மற்றும் அவரது சிறப்பான தலைமைப் பண்பை (Leadership Qualities) அங்கீகரிக்கும் விதமாக இந்தப் பட்டம் வழங்கப்படுகிறது.

இந்திய அணிக்கு டி20 உலகக் கோப்பையைப் வென்று தந்தது மட்டுமின்றி, பல போட்டிகளில் தனிநபர் சாதனைகளையும் படைத்துள்ள ரோஹித் சர்மாவின் சேவையைப் பாராட்டி இந்த ‘முனைவர்’ (Doctorate) பட்டம் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் எம்.எஸ். தோனி, சுரேஷ் ரெய்னா போன்ற டாக்டர் பட்டம் பெற்ற கிரிக்கெட் வீரர்கள் வரிசையில் ரோஹித் சர்மாவும் இணைகிறார்.

இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் “டாக்டர் ரோஹித் சர்மா” எனக் கொண்டாடி வருகின்றனர். அவருக்குத் திரையுலக மற்றும் விளையாட்டுத் துறை பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News